ஆள் ஆளுக்கு டிவிட்டரிலும் முகநூலிலும் டெல்லியில் நடந்த பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கின்றார்கள் .நல்ல விஷயம் ஆனால் இவர்களில் எத்தனை பேர் பெண்ணீயம் பேசத் தகுதியானவர்கள் எனத் தெரியாது ஆனால் யாரெல்லாம் தகுதியற்றவர்கள் எனத் தெரியும்.என்னவோ இப்பொழுதுதான் இந்தியாவில் முதல் வன்புணர்வு நடந்தது போலவும் அந்த ஆறு பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் உத்தமர்கள் போலவும் இவர்கள் எல்லாம் அனைத்துப் பெண்களிடமும் பாரபட்சமின்றி நல்லவிதமாய் நடந்து கொள்பவர்கள் போலவும்....ஷப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே :)
ஆர்குட்டில் எனக்குத் தோழியாக இருந்த ஒரு பெண் இணையத்தில் ஒரு ஆண் கொடுத்த அதீத மனஉளைச்சல் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டாள்.அவள் இத் ஹாக் செய்யப்பட்டு ஆண் இருக்கவும் ஏதோ ஃபேக் என நினைத்திருந்தேன் ஆனால் அந்தப் பெண்ணின் குடும்ப நண்பர் என் நட்பு வட்டத்தில் இருந்தவர் சொல்லியே இந்த உண்மை எனக்குத் தெரியும்.அதே போல பிடிக்காத பெண்ணின் இத் ஹாக் செய்து அதிலே ஆபாச புகைப்படங்களை ஏற்றி அவளின் மொபைல் எண்ணை எந்நேரம் வேண்டுமானால் தொடர்பு கொள்ளலாம் விலைமாது என்ற பெயரோடு பொதுவில் போட்டவனும்உண்டு.அங்கே பார்த்த ஒவ்வொரு நிகழ்வும் இங்கே எச்சரிக்கையாகவே ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தது.
மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் இங்கே உங்களுக்குப் பிடிக்காத பெண்ணை எப்படி நடத்துகிறீர்கள் என்று.ஆண்களுக்குள் எவ்வளவு கேவலமாக வேண்டுமானால் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள்.ஒரு பெண் தன் கருத்துக்கு மாற்றாய் ஒன்றைப் பதிவு செய்தாலும் தாங்க முடியாதவர்களைத் தான் இங்கே அதிகம் பார்த்திருக்கின்றேன்.பெண் ஒரு கருத்தை முன் வைக்கும் பொழுது அவர் சொல்கின்ற கருத்து மட்டும் சரியா தவறா என்று ஆராயப் படுவதில்லை.அவள் சப்பையா கருப்பா சிவப்பா மூக்கு காது எதுவும் கோணலா ஒருவேளை இதையெல்லாம் மீறி அழகென்றால் அதனாலேயே திமிர் என்ற பட்டம் கொடுத்துவிடலாமா இப்படி எல்லா கோணத்திலும் கோணலாக ஆய்வதை ஒரு தலையாய கடமையாய்ச் செய்கின்றார்கள்.பிடித்திருக்கும் வரை ஒரு மாதிரியும் பிடிக்காவிடில் வேறு மாதிரியும் விமர்சிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றார்கள்.
எத்தனை எத்தனை விதமான விமர்சனங்கள் படு கேவலமான முறையில் .என் பதிவின் ஆரம்பப் புள்ளியே தகுதியற்றவர்கள் எல்லாம் இன்று கூட்டத்தோடு கோவிந்தா போடுவதால்தான் .
எந்தப் பெண்ணாவது உங்களை fake id யில் பின்தொடர்ந்து உங்களை அசிங்கமாய்ப் பேசியதாக வரலாறு உண்டா?(சும்மா வாள் பொண்ணு id யைச் சொல்லக் கூடாது அது பக்கா ஃபேக் ) ஆனால் இங்கே பிடிக்காத பெண்களை fake id மூலம் தொந்தரவு செய்வதை ஒரு வழக்கமாக வைத்திருப்பவர்கள் கூட ஒரிஜினல் id யில் பெண்ணீயம் போற்றுவது கோபம் வரவழைக்கும் காமெடி.
கருத்திலோ அல்லது ஏதோ ஒன்றிலோ முரண் பட்டு unfollow வோ block -ஓ செய்துவிட்டால் fake id யில் பின்தொடர்ந்து முடிந்தவரை தொல்லை கொடுப்பதை பிழைப்பாக பார்ப்பவர்கள் இல்லையா?
unfollow ,block செய்துவிட்டேன் என பெருமையாக அறிவிப்பதன் மூலம் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ?அதனால் எந்த சொத்தும் இழக்கப் போவதில்லை என அறிந்த பின்பும்,முடிந்தவரை பிடிக்காதவர்களைப் பற்றி தவறாய்ப் பரப்புரை செய்யும் நோக்கம்தவிர
பிடிக்காத பெண்கள் இணையம் வருவதையே வெறுக்கும் அளவுக்கு உங்களில் நடந்து கொண்டவர் எவருமே இல்லையா?
இங்கே ஒரு பெண்ணிடம் கேவலமாக பேசி ப்லாக் செய்யப்பட்ட பின் வேறு ஒரு ஃபேக் id யில் அவளுடைய ஒரிஜினல் புகைப்படத்தை போட்டுக் கொண்டு வலம் வரவில்லையா?அதை மற்றவர்கள் அனைவரும் சேர்ந்து ரிபோர்ட் அப்யூஸ் கொடுத்தோம் நினைவிருக்கின்றதா?
ஒரிஜினல் படம் போடுவதில் தயக்கம் இல்லை ஆனால் இணையத்தில் பிடிக்காவிடில் விஷமிகள் செய்கின்ற விஷமத்தனத்திற்கு பலியாகி விடக் கூடாது என்றுதான் .ஆனால் பெண்கள் புகைப்படம் போட்டால் நண்பர்களே இருக்க மாட்டார்களாம்.புகைப்படம் போடும் பட்சத்தில் அவர்களுக்கு இவ்ளோ ஃபாலொவர்ஸ் இருக்க வாய்ப்பும் இல்லையாம். அடடே உங்கள் புகைப்படங்களைப் பார்த்த பின்பும் தொடரும் பெண்கள் எல்லாம் அப்போ தியாகிகளா?
யாரோ உங்களிடம் பேசிப் பழகாத பெண்ணைப் பற்றி அவளறியாமல் நண்பர்களிடம் என்னவேண்டுமானாலும் பேசுவது உங்கள் சுதந்திரம்..ஆனால் இங்கே எழுதுபவற்றை பலர் படிக்கின்றார்கள் என்று நினைவு கொள்ளுங்கள். நேருக்கு நேராக DP பற்றி கருத்து சொல்லத் தோன்றினால் அதை நாகரிகமாக சொல்லப் பழகுங்கள்...உங்கள் வீட்டுப் பெண்களை பற்றி உங்களிடமே சப்பை மச்சி ,என்று நேரடியாக சொல்லும் நண்பர்களை என்ன செய்வீர்கள்?மனம் புண்படாத படி பேசத் தெரிய வேண்டும் அல்லது எதுவுமே பேசாமல் நகர்ந்துவிட வேண்டும்..தானே புரிந்து கொள்வார்கள். அழகைப் பற்றி பேச அழகு அவசியம் என்பதில்லை . உங்கள் மனதில் அழுக்கை வைத்துக் கொண்டு பேசாதீர்கள் என்பதே என் வாதம்
பிறர் பாராட்டு புன்னகை வரவைக்கும் அதே சமயம் உள்ளார்ந்த பூரிப்பும் முகம் மலர வைக்கும் வெட்கமும் தன் தலைவனின் பாராட்டே அரிய பொக்கிஷம் பெண்களுக்கு .பெண்களும் உள்நோக்கத்தோடு பேசும் ஆண்களை இனம் கண்டுகொண்டு அலட்சியம் செய்ய வேண்டும் . எதிர்த்துப் பேசுதலை விட அலட்சியம் ஆணுக்கு ஆகச்சிறந்த தண்டனை:)
பிகரோ ,கடலையோ மிகச் சாதரணமாக புழங்கப் படுகின்ற வார்த்தைகள் தான் .அதிலே பிரச்சனை இல்லை ஆனால் மரியாதைக்குரிய ஒரு தாய்மைப் பொறுப்பில் இருக்கின்ற பெண்களிடம் பேச உபயோகப்படுத்த வேண்டாம் எனச் சொன்னதை திருப்பி விட்டு பேசியபொழுது எங்கே போனது?
ஆணின் தவறுகளோடு பெண்களுக்கும் சரிசம உரிமை என்பதல்ல என் வாதம் ஆணின் பெரிய தவறுகள் கூட மிகச் சாதாரணமாகவும் பெண்ணின் சிறிய தவறுகள் கூட ஊதிப் பெரிதும் படுத்தப்படுவது தான் வேதனை.கண்டிப்புகள் இருபக்கமும் சரிசமமாக்கப்பட வேண்டும்
ரிப்ளை செய்யல follow back செய்யல இதற்காக படு கேவலமாக நடந்துகொண்டவர்கள் நிறைய.இது ஒரு பக்கம் என்றால் எந்த விதத்திலும் தனிப்பட்ட முறையில் நேரடியாக எந்த விரோதமும் இருக்காது ஆனால் எதையேனும் தவறாய்ப் புரிந்துகொண்டு நக்கலடிப்பவர்கள் அதிகம்.
அதே போல ஒரு ட்வீட் யதார்த்தமாய் நாம் எழுதினால் அதை இரட்டை அர்த்தமாக்கி விடுவது இங்கே பல ஆண்களுக்கு கை வந்த கலை.இவர்களுக்குள் இருக்கும் குறிச் சொற்களும் நமக்குப் புரியாது.வேறு எவரேனும் ஆண் நண்பர் தனிப்பட்ட முறையில் அது மோசமான வார்த்தை இங்கே நீக்கிவிடுங்கள் என்று சொல்லும் வரை புரியாது
உங்களுக்கு ஒருவர் நல்லவர் என்றால் அவர் எல்லாரிடமும் நல்லவராய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கா என்ன?எவரும் தன் யோக்யதை என்ன எனச் சொல்வதுண்டா நட்பிடம்?
சௌமியின் இந்த ட்வீட் போலத் தான் நடக்குது.உடல்ரீதியாக தொல்லை கொடுப்பவர்களை விட இப்படி வார்த்தைகளிலாவது வன்புணரும் வெறியும் வக்கிரமும் கொட்டுபவர்கள் அதிகம் இருக்கத் தான் செய்கின்றனர்.
பெண்கள் என்ன எப்படி எழுதணும் மொக்கை ,பாட்டு போடக் கூடாது அது போடுற நேரத்துக்கு RT பண்ணனும் ,என்று தொடர்ச்சியாக விமர்சித்துக் கொண்டே இருப்பவர்கள்தான் தங்கள் கருத்து சுதந்திரம் என்று கண்றாவியாய் பேசுவதை அனுமதிக்க கோருவதும் தங்களது கருத்து சுதந்திரம் பிறருடையதை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது அறியாதவர்கள். மர்ம உறுப்பில் ஓங்கி அடிப்பது போன்ற வெறி கொண்ட வார்த்தைகள் இங்கே பலரிடம் நான் பார்த்திருக்கின்றேன்.
இங்கே பெண்கள் பொது வெளிக்குத்தான் வருகிறார்களே அன்றி பொதுவாழ்க்கைக்கு அல்ல உங்கள் இஷ்டத்திற்கு விமர்சிப்பதற்கு.பிடித்தால் follow பிடிக்காவிட்டால் unfollow ,block இதை விடுத்து எந்நேரம் என்ன ட்வீட் போடுவார்கள் அதிலே எதைக் குறை சொல்லலாம் என்று அலைபவர்களை என்னவென்று சொல்வது? பதிலுக்கு திருப்பிக் கொடுத்தால் தாங்க முடிவதில்லை.உடனே அழுக்கு வார்த்தைகளை அள்ளிக் கொண்டு சகிட்டு மேனிக்கு பேசுவது.
பிடிக்காதவர்களைப் பற்றி அறிய ஏதோ ஓர் ஆவல் இருக்கலாம்.அதற்காக அவர்களையே நினைத்துகொண்டே இருப்பது மனநல பாதிப்பின் அறிகுறி.
தனக்காக ஒரு பெண் தாங்கிப் பேசினால் அது நட்பு அதையே ஒரு பெண்ணுக்காக இன்னொரு ஆண் தாங்கிப் பேசினால் வேறு கேவலமான உள்நோக்கம்.என்ன லாஜிக் இது?
இன்னும் சிலர் இருக்கின்றார்கள் அவர்களுக்குப் பிடிக்காதவர்கள் இருக்கின்ற நேரம் உரையாடல் என அலுத்துக் கொள்வதும் இல்லாத நேரம் interactions இல்லாட்டி ட்விட்டர் போர் என சிலாகிப்பதும் ஆச்சர்யமாய் இருக்கிறது :) நல்லவேளை வேற்று ரசனையாளர்களாக இருந்தாலும் என்னைக் காயப்படுத்தும் நோக்கம் கொண்ட எவரும் இல்லை இப்பொழுது என் டைம் லைனில்:) பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பிடிக்காதவர்களின் ரசனையை நக்கலடித்துக் கொண்டே இருப்பது ஒருவித மனநோய்
தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஒருவரோடு எவ்வித விரோதமும் நேரடியாக இல்லாத பட்சத்தில் அவர்களைப் பற்றிய கிண்டலும் கிண்டல் செய்பவர்களின் பாய்ந்து RT யும் அவசியம்தானா?
சுயம் என்றால் என்ன? பிறரின் பாராட்டுக்காகவும் புகழுக்காகவும் ,கவனத்தை ஈர்ப்பதற்காகவும் எதையேனும் செய்யாமல் குறைகளை மறைக்காது உள்ளது உள்ளபடி முடிந்தவரை மனசாட்சியோடு இருப்பதுவே.ஆபாசமாகவும் வக்கிரமாகவும் எழுதுவது மட்டுமே தன் சுயம் எனக் காட்டுவது அல்ல
அதிக பட்சமாய் அழகைக் குறை சொல்வது, உங்களுக்குப் பிடிக்காத பெண்ணுக்கு ஆதரவாய்ப் பேசுபவர்களை மாமா என்றழைப்பது,இன்னும் ஒரு படி மேலே அவர்களுக்குள் சம்திங் சம்திங் என கதை கட்டி விடுவது, இதைத் தவிர வேறு என்ன கிழிக்க முடியும்? இந்தப் பேச்சுக்கள் யாவும் விமர்சிக்கும் உங்கள் தரத்தையே (?!) காட்டுகிறதே அன்றி விமர்சிக்கப்படும் நபர்களைப் பற்றி அல்ல
இன்னும் சில பெண்ணீயவாதிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கென்று ஒரு ரெகுலேட்டர் இருக்கின்றது பிடித்தவர்கள்,சம்பந்தமே இல்லாதவர்கள் அல்லது தான் நேரடியாக பாதிக்கப்பட்டால் பெண்ணீயம் சூடு பறக்கும்.அதுவே பிடிக்காதவர்கள் அல்லது கிண்டல் செய்பவர்கள் தங்கள் நண்பர்களாக இருந்தால் ரெகுலேட்டர் வேறு திசையில் ட்யூன் ஆகிவிடும்.எதற்கும் டெல்லிப் பெண் உயர்ஜாதியா எனப் பார்த்துக் கொள்ளுங்கள் இல்லாவிடில் நீங்கள் எழுதியது எல்லாம் வீணாகிவிடும் .எல்லா உயர்(த்திக்கொண்ட)ஜாதிப் பெண்களும் பலம் வாய்ந்தவர்கள் இல்லை என்பது புரிந்துவிடவா போகின்றது?பிடிக்காத பெண் தவறாய்ப் பேசியதாகப்பட்டால் அவர் தவறை மட்டும் விமர்சிக்காமல் ஆபாசமாக தாக்கும் நண்பர்களைக் கண்டிப்பதில்லை இந்தப் பெண்ணீய வாதிகள்.கண்டித்திருந்தால் பல பிரச்சனைகளைத் தவிர்த்திருக்கலாம் .தொடர்ச்சியாக திரும்ப அதையே அவர்களும் செய்திருக்க மாட்டார்கள்
ஜாதி பற்றியும் சில வரிகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன் .இணையத்தில் மட்டும் தான் ஜாதி வெறி என்பது என்னமோ பிராமணர்களுக்கும் , தேவர்களுக்கும் மட்டுமே இருப்பது போலப் பேசுவது வியப்பாக இருக்கின்றது.சாதி இல்லை ரத்தத்தில் சாதி தெரியுமா என்பவர்கள் கூட சாதி புத்தி எனக் குற்றம் சாட்டத் தவறுவதில்லை.மதுரையில் மன்னர் "நாயக்கர்"கல்லூரி ,வெள்ளைச் சாமி "நாடார்"கல்லூரி ,சௌராஷ்டிரா " கல்லூரி என ஜாதிக்கொரு ,மதத்திற்கு ஒரு பள்ளி கல்லூரிகள் உள்ளன.திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் மண்டபம் உண்டு பறவைக்கு திருமணம் கூட ஒரு சமூகத்தின் திருமண மண்டபம்தான். வீடு வாடகைக்கு தேடித் பாருங்கள் தேவர்(பிரச்சனை செய்யக் கூடுமாம்),முஸ்லிம் ,கிருத்துவர் (வீடு சுத்தமா வச்சுக்க மாட்டாங்களாம்) என்றால் தர மாட்டாங்க
சாதிவெறி எதிர்ப்பை ஆதிக்க சாதியினரிடம் இருந்து ஆரம்பிச்சது எல்லாம் சரிதான் ஆனால் ரொம்ப வருசமா ஆரம்பிச்ச இடத்திலேயே நிற்கின்றீர்கள் சுற்றிப் பார்த்தால் ஏகப்பட்ட ராமதாசுகளும் காடுவெட்டி குருவும் ஒவ்வொரு சமூகத்திலும் உண்டெனப் புலப்படும்.
வக்கிரம் பிடித்த மனதுகளை நான் பூணூல் வைத்துப் பிரிப்பதில்லை . களைச் செடிகள் அனைத்து தரப்பிலும் உண்டு .ஒரே ஜாதில பெண்ணெடுத்துக் கொடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கும் அதே போல செய்பவர்களும் அல்லது தலித் அல்லாத சமமான ஜாதி என்றால் காதல் திருமணம் ஓகே எனச் சொல்பவர்களும் இங்கே எதற்காக ஒரு போலி முகமூடியில் திரிகிறார்கள் எனத் தெரியவில்லை.(கவுண்டமணி டயலாக் தான் நினைவுக்கு வருகிறது அரசியல்வாதியும் சினிமாக்காரனும் தான் பண்றாங்கன்னா நாம வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் ..:) )
போலி ஆன்மீக வாதிகள் போல போலி நாத்திகர்களும் உண்டு.பெரியார் என்றாலே கடவுள் மறுப்பு மட்டும் தானா?அவரின் சுரீர் ரக பெண்ணுரிமைக் கருத்துகளை எல்லாம் படித்தவர்களே இல்லையா?ஒரு பக்கம் பெரியாரிசம் , இன்னொரு பக்கம் பிடிக்காத பெண்ணைப் பற்றித் தரக்குறைவாக பேசுதல் இது என்ன வகை மனநிலை?
எத்தனை ஸ்க்ரீன் ஷாட் வேண்டும் உங்களுக்கு ?நீங்கள் இங்கே மதிக்கின்ற சிலரது உண்மை முகங்கள் மிகக் கோரமானவை.
ஆனால் பொதுவாக சில பெண்கள் தங்களை வைத்துப் பிரச்சனைகள் வீட்டிற்குள் நுழைக்க விரும்புவது இல்லை . செருப்பைக் கழட்டி விட்டு வீட்டுள் நுழைவது போலத்தான் அத்தனையையும் உதிர்த்துவிட்டு நுழைவது. குடும்பத்தின் மீது உள்ள பிரியமே பலவீனம் பல பெண்களுக்கு. எங்கே அசிங்கமோ,வீட்டில் வருந்துவார்களோ என்று பொது வெளியில் நடப்பவற்றை சகிக்கவே வேண்டி இருக்கின்றது. பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்ள முயல்பவர்களை ஜென்மங்களை பெருந்தன்மையாக ஒருக்காலும் மன்னிக்கவும் முடியாது அதற்காக அவர்கள் படு கேவலமான நிலை அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவும் முடியாது.வெறுப்பதற்குக் கூட இடமின்றி மனதில் இருந்து முழுவதுமாய் அகற்றி விட்டு அவர்களால் துளியும் பாதிக்கப்படவில்லை எனஉணர்த்தி அவர்களின் முன்பு நலமாய் இருப்பதும் புழுவைப் போல அவர்களை அலட்சியம் செய்வதுமே நாம் கொடுக்கும் பெரிய தண்டனை.மீதி இறைவன் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவது
மெய் &மெய் நிகர் உலகங்களில் பெண்களைத் தொந்தரவு செய்பவர்களுக்கு கீழ்க்கண்டவை சமர்ப்பணம்
"அரட்டைப் பெண் கொடுத்த அரசியல் கமெண்ட் :
வெறி நாய்க்கு பயந்து ஒதுங்குவது அந்த வெறி நாய்க்குப் பெருமை இல்லீங்க "வெறி நாய் கடிச்சிடும்னு
"சாக்கடைகள் என்று அறிந்த பின் கல்லெறியாமல் ஒதுங்கிச் செல்வதே புத்திசாலித்தனம் "
பெண் கொடுமைக்கு எதிரான சட்டங்கள் எல்லாம் தவறாகவே பயன்படுத்தப்படுகின்றன என கூவுவோருக்கு இங்கே குழந்தை என்ற ஒரே காரணத்திற்காகவோ அல்லது குடும்பச் சூழல் காரணமாகவோ வேறுவழியின்றி சகித்துக் கொள்பவர்களே அதிகம். 75% பேர் இன்னும் வெளியேவரல.என் பக்கத்து வீட்டில் நடு ராத்திரியில் ஓலம் கதவை உடைத்துவிட்டுப் பார்த்தால் நிறைமாத கர்ப்பிணியை கையையும் காலையும் கட்டிவைத்து அடித்துக் கொண்டிருந்தான் குடிகாரக் கணவன். அந்தப் பெண் இன்றும் அந்த நபரோடுதான் வாழ்கின்றார். காவல் நிலையம் ,நீதி மன்றம் வாசப்படி மிதிப்பதையே கேவலம் என நினைக்கின்ற மக்கள் நிறைய அதற்கு கொடுமையைச் சகிக்கலாம் என்றே எண்ணுகின்றனர்
ஏன் என்னையே கேட்டால் பெண்ணுரிமை பேசி (எனக்காகவே என்றாலும்) போராடுவது முக்கியமா அல்லது குறைந்த பட்ச நிம்மதியாவது முக்கியமா என்றால் இரண்டாவது வாய்ப்பையே தேர்ந்தெடுப்பேன்.எத்தனை பேரிடம் மல்லுக் கட்ட முடியும்.ஒதுங்கிச் சென்றுவிடுவது உத்தமம் இல்லையா?
அடுத்தது உடை எவ்வளவுதான் கண்ணியமாக உடையணிந்து இருந்தாலும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து மறு நிறுத்தம் வருவதற்குள் பார்வையாலே புணர்ந்து விடும் வெறி கொண்டவர்கள் உண்டு.ஆபாசமாக எதையேனும் பேசி (காறி உமிழ்ந்தால் கூட அமிர்தம்தான்)அதை நாம் கவனித்திருந்தாலே போதும் ஏதோ பெரும் பேறு அடைந்த நிலையில் வக்கிரமான சிரிப்பு வரும் . அதனால் இதுபோன்ற பாலியல் வக்கிரங்களுக்கு உடை மட்டுமே காரணம் என்பதை நிச்சயம் ஏற்க முடியாது.பால்மணம் மாறாத பூப்பெய்தாத குழந்தைகளை வன்புணர்ந்த மிருகங்களை எல்லாம் நம் சமூகத்தில் கேள்விப் படாமலா இருக்கின்றோம்? ஆனால் அதற்காக நான் எப்படி வேண்டுமானாலும் உடையணிவேன் நீ பார்க்காமல் போ என்ற பேச்சிலும் உடன்பாடில்லை.கண்ணியமாக உடையணிவதே பாதுகாப்பற்ற தேசத்தில் உணர்வுகளைத் தூண்டும் வகையில் கண்களை உறுத்தும் வகையில் உடையணிவது எவ்விதத்தில் பாதுகாப்பாக இருக்கும்?இதிலே சம உரிமை கோருவது நமக்கே பிசகாக விடியும்
தாறுமாறான உடைகளைப் பார்த்தால் ஆண் தடுமாறுவது அவன் இயல்பு.அப்படி இல்லாவிட்டால் அவன் ஆணுமில்லை (இதை நான் சொல்லல ஒரு தேர்ந்த மன நல மருத்துவர் குறிப்பிட்டது) அதை மீறி உறுதியாய் இருப்பது அவனது மேன்மை அதுவே ஆண்மை
நடு நிசி கீச்சு எனப் புரியாமல் அர்த்தம் கேட்ட பொழுது மிகச் சாதாரணமாகச் சொல்லி நழுவிய நண்பனிடம் இருந்தது ஆண்மை
தோழியுடன் சாதரணமாய்ப் பேசியதை இரட்டை அர்த்தமாக்கிவிட்ட நண்பர்களுக்காக சட்டென்று மன்னிப்பு கேட்ட நண்பனிடம் இருந்தது ஆண்மை
தந்தை இறந்துவிட்டார் இனி இந்த வீட்டில் பைசா தேறாது வேறு பெண் பார் என உறவினர்கள் வற்புறுத்தியும் எதையும் எதிர்பாராமல் திருமணமும் குழந்தை இல்லை எனக் காரணம் காட்டி மறுமணமும் செய்யாத என் தந்தையிடம் பார்த்திருக்கிறேன் ஆண்மையை
குடித்திருக்கிறேன் இத்தோடு உன்னோடு பேசுவது சரியாய் இராது என்று விலகிச் சென்ற நண்பனிடம் உள்ளது
பிடிக்கவில்லை என ஒதுங்கிய பெண்ணை வலிய சென்று வம்பிழுத்து ஒதுங்கியது சரிதான் என உறுதிப்படுத்தும் வகையில் வெறித்தனம் காட்டாமல் இப்படி ஒரு மனிதனை தவறாய்ப் புரிந்துகொண்டோமோ என அவளை உணரவைப்பதில் இருக்கின்றது ஆண்மை
வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் மட்டம் செய்யாமல் தளர்ந்த நேரங்களில் தாங்கிப் பிடிப்பது ஆண்மை
பெண்ணின் வயிற்றில் பிறந்து பெண்ணோடு வளர்ந்தவன் பெண்ணின் வலிகளை புரிந்து வைத்திருப்பது
பொன்னிற்காக தன்னை விலைபேசாமல் பெண்ணிற்காக மட்டுமே மணம் முடிப்பவனிடம்
ரசனைகள் சம்பந்தப் பட்ட பெண்ணை எவ்விதமாகவும் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது
அசட்டுத் துணிச்சலோ வெற்று ஜம்பமோ அன்றி தேவையான இடத்தில் வெளிப்படும் தைரியத்தில்
உடல்ரீதியாகவும் ஒரு குழந்தைக்கு அப்பன் எனப் பெயர் பெறுவதிலும் மட்டுமே அல்ல குழந்தையாய் அரவணைத்துச் செல்வதில் இருக்கின்றது
ஒரு பெண்ணை முழு நிர்வாணமாக பார்க்க நேர்ந்தாலும் வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ளாமல் உறுதியோடு நிற்பவன் வீரன் எனப் படித்திருக்கின்றேன்
விருப்பமில்லாத சரிக்கு சமமான உடல் வலிமை அற்ற பெண்ணை வன்புணர்வதில் அல்ல விரும்பிய மனைவியே ஆனாலும் அல்லது விலைமகளே ஆனாலும் பிடிக்கவில்லை என்றால் விலகி நிற்பதுதான் ஆண்மை
"மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம் மானம் காக்கும் மாந்தர் யார்க்கும் மாலை வாங்கி போடுவோம் "
" பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடல் சொன்ன சித்தர்களும் ஈன்ற தாயும் பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே "
இதைச் சொன்னவரும் ஆண்தான் இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறதா?அல்லது இவரிடமும் எப்படி அம்மாவை இழுக்கப் போச்சு அல்லது உன் வீட்டுப் பெண்ணை போல் பாவி என்பதற்கு என் மனைவி போல நினைக்கலாமா என கேள்வி கேட்பது அழகா?
இயல்பான போராட்ட குணம் தைரியம் மட்டும் இல்லாவிட்டால் மெய் உலகத்தில் மட்டுமல்ல மெய் நிகர் உலகத்திலும் கூட நடமாட முடியாது
பொதுவா பிரச்சனைகளை வெளியே சொல்லும் பொழுதெல்லாம் இது விளம்பரம் பப்ளிசிட்டி என திசை திருப்பிவிடும் நபர்களுக்கு இதனால் என் பெர்சனல் வாழ்க்கைக்கு ஒரு துளி கூட உபயோகமில்லை.இணையத்திற்கு வர வீட்டில் அனுமதிப்பதும் எந்த பிரச்னையும் இல்லை என வீட்டில் உத்தரவாதம் கொடுத்ததால்தான்.வேண்டாம் என முடிவாகச் சொல்லிவிட்டால் இதுவும் தற்காலிகமே
டெல்லி பெண்ணுக்காக உங்கள் கொந்தளிப்பு உண்மையாகவே இருக்கட்டும் நலம் இது ஒரு ஆரம்பமே ஆனால் உங்கள் வசதிக்கு ஊடகம் பொருட்படுத்தாத மற்ற நிகழ்வுகளைப் பற்றியும் இதே போல அக்கறையாக விவாதியுங்கள்.ஆடை விலகவும் பதறும் பெண்களை விட அந்நேரம் வெறிக்காத தன்மையை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுங்கள்.சுய ஒழுக்கம் என்பதை உங்களில் இருந்தே ஆரம்பியுங்கள்.உங்களுக்கு ரோஷம் வர ஒவ்வொருமுறையும் ஏதேனும் ஓர் உயிர் பலி ஆக வேண்டியிருக்கின்றது என உணருங்கள்.ஒரு சிலரிடம் பட்ட சூட்டினால் மற்ற ஆண்களிடம் எச்சரிக்கையாகவும் நம்பிக்கையற்றும் பழக வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு பெண்கள் இருப்பது நிச்சயம் தவறு செய்யாத/செய்ய விரும்பாத நல்ல ஆண்களுக்கும் அவமானமே
உங்கள் வீட்டு வாசலை நீங்கள் சுத்தப்படுத்தினால் உலகமே சுத்தமாகிவிடும் என்ற பழமொழி நிஜமாகட்டும்.
பெண்களுக்கு சில வார்த்தைகள் : முடிந்தவரை எச்சரிக்கையுடன் பழகுங்கள் சில இணைய நட்புகள் காலைச் சுற்றிய பாம்பைப் போல..எப்பொழுது கடிக்கும் என்பது தெரியாது..குறைந்த பட்சம் பாம்பு என்பதை அறிந்தேனும் வைத்திருந்து அளவோடு இருங்கள்..அனுபவமும் கவனிப்பும் காரணமாக இவர்கள் இப்படித்தான் என்ற புரிதல் வந்த பின் அளவோடும் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியுடன் பேசுவதால் இப்பொழுது நிம்மதியாக இருக்கிறேன்
மெய் உலகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது தெரிஞ்ச விஷயம்.ஆனால் மெய் நிகர் உலகத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனும் பொழுது மெய் உலகைக் குற்றம் சொல்லி என்ன செய்ய ?ஒரு பெண்ணை உடல் ரீதியாக தொந்தரவு செய்வது மட்டும் தான் குற்றம் எனக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா?மன ரீதியாக உளைச்சல் கொடுப்பதெல்லாம் அந்த கணக்கில் வராதா?அப்படித் தொந்தரவு செய்பவர்களை விடுத்து நீ தைரியமாக இரு என்று மட்டும் அறிவுரை கூறுவது எவ்வாறு?எல்லா மனிதர்களும் ஒரே குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பது சாத்தியமற்ற பட்சத்தில்
ஆர்குட்டில் எனக்குத் தோழியாக இருந்த ஒரு பெண் இணையத்தில் ஒரு ஆண் கொடுத்த அதீத மனஉளைச்சல் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டாள்.அவள் இத் ஹாக் செய்யப்பட்டு ஆண் இருக்கவும் ஏதோ ஃபேக் என நினைத்திருந்தேன் ஆனால் அந்தப் பெண்ணின் குடும்ப நண்பர் என் நட்பு வட்டத்தில் இருந்தவர் சொல்லியே இந்த உண்மை எனக்குத் தெரியும்.அதே போல பிடிக்காத பெண்ணின் இத் ஹாக் செய்து அதிலே ஆபாச புகைப்படங்களை ஏற்றி அவளின் மொபைல் எண்ணை எந்நேரம் வேண்டுமானால் தொடர்பு கொள்ளலாம் விலைமாது என்ற பெயரோடு பொதுவில் போட்டவனும்உண்டு.அங்கே பார்த்த ஒவ்வொரு நிகழ்வும் இங்கே எச்சரிக்கையாகவே ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தது.
எத்தனை எத்தனை விதமான விமர்சனங்கள் படு கேவலமான முறையில் .என் பதிவின் ஆரம்பப் புள்ளியே தகுதியற்றவர்கள் எல்லாம் இன்று கூட்டத்தோடு கோவிந்தா போடுவதால்தான் .
டிவிட்டருக்கு வந்த புதிதில் நண்பர்களுக்கு எதிர் ட்வீட் ஜாலியாக போட்டது உண்டு ஆனால் எனக்கு எப்பவும் பெண் என்றால் இப்படி ஆண் எப்பவுமே இப்படி என்று பொத்தாம் பொதுவாய் ஒரு கருத்தை முன் வைப்பதில் உடன்பாடே கிடையாது. படு கிரிமினலான குணம் கொண்டவர்களை இரு தரப்பிலும் பார்த்திருக்கின்றேன்.எனக்கு அறவே பிடிக்காத பெண்களும் உண்டு பிடித்த ஆண்களும் உண்டு.பிடிக்காமல் போவதற்கு பாலினம் எல்லாம் காரணமே இல்லை.இணையத்தில் நான் அறிந்து கொண்ட வரையில் இங்கே நடுநிலையாளர்கள் எல்லாம் இல்லை.தனக்குப் பிடித்தவர்களை எவரும் குற்றம் சொல்லி விடக் கூடாது பிடிக்காதவர்களை எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசலாம்.அதுவே கருத்து சொதந்திரம்.கேவலமாக எவரேனும் பேசினால் அவரை அதைவிடக் கேவலமாக பேசி கண்டித்தால் சரியாகி விடும் என்பது இணையவாசிகள் நம்பிக்கை.
இங்கே நீங்கள் ஒருவரைப் பற்றி கேவலமாக எழுதுவதையெல்லாம் அவர்களின் முகத்திற்கு நேராக சென்று சொல்லிவிட முடியுமா?சொல்லி விட்டு முழுதாய்த் திரும்பி விட முடியுமா?(அல்லது உங்களைப் பற்றி பிறர் விமர்சிப்பதை அனுமதிப்பீர்களா?எந்த ஒரு விமர்சகனுக்கும் தன்னைப் பற்றிய விமர்சனம் தாங்கிக் கொள்ள முடிவதே இல்லை அது சாமான்யனோ பிரபலமோ அதுவே நிதர்சனம்.
யாரைத்தான் கிண்டலடிப்பது என்றில்லாமல் எவரையும் கிண்டல் அடிப்பவர்கள் தனிப்பட்ட முறையில் ஏதேனும் சாதித்ததுண்டா? ராஜாவோ,ரஜினியோ,கமலோ ,விஜயோ ஸ்க்ரீன் ஷாட் எடுக்க மாட்டார்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற தைரியம்
விமர்சிக்க தகுதி தேவை இல்லை ஆனால் உங்கள் விமர்சனம் தகுதியானதாக இருக்க வேண்டும் என்று @krpthiru எழுதிய ட்வீட்டே நினைவுக்கு வருகின்றது
இங்கே நீங்கள் ஒருவரைப் பற்றி கேவலமாக எழுதுவதையெல்லாம் அவர்களின் முகத்திற்கு நேராக சென்று சொல்லிவிட முடியுமா?சொல்லி விட்டு முழுதாய்த் திரும்பி விட முடியுமா?(அல்லது உங்களைப் பற்றி பிறர் விமர்சிப்பதை அனுமதிப்பீர்களா?எந்த ஒரு விமர்சகனுக்கும் தன்னைப் பற்றிய விமர்சனம் தாங்கிக் கொள்ள முடிவதே இல்லை அது சாமான்யனோ பிரபலமோ அதுவே நிதர்சனம்.
யாரைத்தான் கிண்டலடிப்பது என்றில்லாமல் எவரையும் கிண்டல் அடிப்பவர்கள் தனிப்பட்ட முறையில் ஏதேனும் சாதித்ததுண்டா? ராஜாவோ,ரஜினியோ,கமலோ ,விஜயோ ஸ்க்ரீன் ஷாட் எடுக்க மாட்டார்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற தைரியம்
விமர்சிக்க தகுதி தேவை இல்லை ஆனால் உங்கள் விமர்சனம் தகுதியானதாக இருக்க வேண்டும் என்று @krpthiru எழுதிய ட்வீட்டே நினைவுக்கு வருகின்றது
கருத்திலோ அல்லது ஏதோ ஒன்றிலோ முரண் பட்டு unfollow வோ block -ஓ செய்துவிட்டால் fake id யில் பின்தொடர்ந்து முடிந்தவரை தொல்லை கொடுப்பதை பிழைப்பாக பார்ப்பவர்கள் இல்லையா?
unfollow ,block செய்துவிட்டேன் என பெருமையாக அறிவிப்பதன் மூலம் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ?அதனால் எந்த சொத்தும் இழக்கப் போவதில்லை என அறிந்த பின்பும்,முடிந்தவரை பிடிக்காதவர்களைப் பற்றி தவறாய்ப் பரப்புரை செய்யும் நோக்கம்தவிர
பிடிக்காத பெண்கள் இணையம் வருவதையே வெறுக்கும் அளவுக்கு உங்களில் நடந்து கொண்டவர் எவருமே இல்லையா?
இங்கே ஒரு பெண்ணிடம் கேவலமாக பேசி ப்லாக் செய்யப்பட்ட பின் வேறு ஒரு ஃபேக் id யில் அவளுடைய ஒரிஜினல் புகைப்படத்தை போட்டுக் கொண்டு வலம் வரவில்லையா?அதை மற்றவர்கள் அனைவரும் சேர்ந்து ரிபோர்ட் அப்யூஸ் கொடுத்தோம் நினைவிருக்கின்றதா?
ஒரிஜினல் படம் போடுவதில் தயக்கம் இல்லை ஆனால் இணையத்தில் பிடிக்காவிடில் விஷமிகள் செய்கின்ற விஷமத்தனத்திற்கு பலியாகி விடக் கூடாது என்றுதான் .ஆனால் பெண்கள் புகைப்படம் போட்டால் நண்பர்களே இருக்க மாட்டார்களாம்.புகைப்படம் போடும் பட்சத்தில் அவர்களுக்கு இவ்ளோ ஃபாலொவர்ஸ் இருக்க வாய்ப்பும் இல்லையாம். அடடே உங்கள் புகைப்படங்களைப் பார்த்த பின்பும் தொடரும் பெண்கள் எல்லாம் அப்போ தியாகிகளா?
யாரோ உங்களிடம் பேசிப் பழகாத பெண்ணைப் பற்றி அவளறியாமல் நண்பர்களிடம் என்னவேண்டுமானாலும் பேசுவது உங்கள் சுதந்திரம்..ஆனால் இங்கே எழுதுபவற்றை பலர் படிக்கின்றார்கள் என்று நினைவு கொள்ளுங்கள். நேருக்கு நேராக DP பற்றி கருத்து சொல்லத் தோன்றினால் அதை நாகரிகமாக சொல்லப் பழகுங்கள்...உங்கள் வீட்டுப் பெண்களை பற்றி உங்களிடமே சப்பை மச்சி ,என்று நேரடியாக சொல்லும் நண்பர்களை என்ன செய்வீர்கள்?மனம் புண்படாத படி பேசத் தெரிய வேண்டும் அல்லது எதுவுமே பேசாமல் நகர்ந்துவிட வேண்டும்..தானே புரிந்து கொள்வார்கள். அழகைப் பற்றி பேச அழகு அவசியம் என்பதில்லை . உங்கள் மனதில் அழுக்கை வைத்துக் கொண்டு பேசாதீர்கள் என்பதே என் வாதம்
பிறர் பாராட்டு புன்னகை வரவைக்கும் அதே சமயம் உள்ளார்ந்த பூரிப்பும் முகம் மலர வைக்கும் வெட்கமும் தன் தலைவனின் பாராட்டே அரிய பொக்கிஷம் பெண்களுக்கு .பெண்களும் உள்நோக்கத்தோடு பேசும் ஆண்களை இனம் கண்டுகொண்டு அலட்சியம் செய்ய வேண்டும் . எதிர்த்துப் பேசுதலை விட அலட்சியம் ஆணுக்கு ஆகச்சிறந்த தண்டனை:)
பிகரோ ,கடலையோ மிகச் சாதரணமாக புழங்கப் படுகின்ற வார்த்தைகள் தான் .அதிலே பிரச்சனை இல்லை ஆனால் மரியாதைக்குரிய ஒரு தாய்மைப் பொறுப்பில் இருக்கின்ற பெண்களிடம் பேச உபயோகப்படுத்த வேண்டாம் எனச் சொன்னதை திருப்பி விட்டு பேசியபொழுது எங்கே போனது?
ஆணின் தவறுகளோடு பெண்களுக்கும் சரிசம உரிமை என்பதல்ல என் வாதம் ஆணின் பெரிய தவறுகள் கூட மிகச் சாதாரணமாகவும் பெண்ணின் சிறிய தவறுகள் கூட ஊதிப் பெரிதும் படுத்தப்படுவது தான் வேதனை.கண்டிப்புகள் இருபக்கமும் சரிசமமாக்கப்பட வேண்டும்
ரிப்ளை செய்யல follow back செய்யல இதற்காக படு கேவலமாக நடந்துகொண்டவர்கள் நிறைய.இது ஒரு பக்கம் என்றால் எந்த விதத்திலும் தனிப்பட்ட முறையில் நேரடியாக எந்த விரோதமும் இருக்காது ஆனால் எதையேனும் தவறாய்ப் புரிந்துகொண்டு நக்கலடிப்பவர்கள் அதிகம்.
அதே போல ஒரு ட்வீட் யதார்த்தமாய் நாம் எழுதினால் அதை இரட்டை அர்த்தமாக்கி விடுவது இங்கே பல ஆண்களுக்கு கை வந்த கலை.இவர்களுக்குள் இருக்கும் குறிச் சொற்களும் நமக்குப் புரியாது.வேறு எவரேனும் ஆண் நண்பர் தனிப்பட்ட முறையில் அது மோசமான வார்த்தை இங்கே நீக்கிவிடுங்கள் என்று சொல்லும் வரை புரியாது
உங்களுக்கு ஒருவர் நல்லவர் என்றால் அவர் எல்லாரிடமும் நல்லவராய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கா என்ன?எவரும் தன் யோக்யதை என்ன எனச் சொல்வதுண்டா நட்பிடம்?
சௌமியின் இந்த ட்வீட் போலத் தான் நடக்குது.உடல்ரீதியாக தொல்லை கொடுப்பவர்களை விட இப்படி வார்த்தைகளிலாவது வன்புணரும் வெறியும் வக்கிரமும் கொட்டுபவர்கள் அதிகம் இருக்கத் தான் செய்கின்றனர்.
பெண்கள் என்ன எப்படி எழுதணும் மொக்கை ,பாட்டு போடக் கூடாது அது போடுற நேரத்துக்கு RT பண்ணனும் ,என்று தொடர்ச்சியாக விமர்சித்துக் கொண்டே இருப்பவர்கள்தான் தங்கள் கருத்து சுதந்திரம் என்று கண்றாவியாய் பேசுவதை அனுமதிக்க கோருவதும் தங்களது கருத்து சுதந்திரம் பிறருடையதை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது அறியாதவர்கள். மர்ம உறுப்பில் ஓங்கி அடிப்பது போன்ற வெறி கொண்ட வார்த்தைகள் இங்கே பலரிடம் நான் பார்த்திருக்கின்றேன்.
இங்கே பெண்கள் பொது வெளிக்குத்தான் வருகிறார்களே அன்றி பொதுவாழ்க்கைக்கு அல்ல உங்கள் இஷ்டத்திற்கு விமர்சிப்பதற்கு.பிடித்தால் follow பிடிக்காவிட்டால் unfollow ,block இதை விடுத்து எந்நேரம் என்ன ட்வீட் போடுவார்கள் அதிலே எதைக் குறை சொல்லலாம் என்று அலைபவர்களை என்னவென்று சொல்வது? பதிலுக்கு திருப்பிக் கொடுத்தால் தாங்க முடிவதில்லை.உடனே அழுக்கு வார்த்தைகளை அள்ளிக் கொண்டு சகிட்டு மேனிக்கு பேசுவது.
பிடிக்காதவர்களைப் பற்றி அறிய ஏதோ ஓர் ஆவல் இருக்கலாம்.அதற்காக அவர்களையே நினைத்துகொண்டே இருப்பது மனநல பாதிப்பின் அறிகுறி.
தனக்காக ஒரு பெண் தாங்கிப் பேசினால் அது நட்பு அதையே ஒரு பெண்ணுக்காக இன்னொரு ஆண் தாங்கிப் பேசினால் வேறு கேவலமான உள்நோக்கம்.என்ன லாஜிக் இது?
இன்னும் சிலர் இருக்கின்றார்கள் அவர்களுக்குப் பிடிக்காதவர்கள் இருக்கின்ற நேரம் உரையாடல் என அலுத்துக் கொள்வதும் இல்லாத நேரம் interactions இல்லாட்டி ட்விட்டர் போர் என சிலாகிப்பதும் ஆச்சர்யமாய் இருக்கிறது :) நல்லவேளை வேற்று ரசனையாளர்களாக இருந்தாலும் என்னைக் காயப்படுத்தும் நோக்கம் கொண்ட எவரும் இல்லை இப்பொழுது என் டைம் லைனில்:) பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பிடிக்காதவர்களின் ரசனையை நக்கலடித்துக் கொண்டே இருப்பது ஒருவித மனநோய்
தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஒருவரோடு எவ்வித விரோதமும் நேரடியாக இல்லாத பட்சத்தில் அவர்களைப் பற்றிய கிண்டலும் கிண்டல் செய்பவர்களின் பாய்ந்து RT யும் அவசியம்தானா?
சுயம் என்றால் என்ன? பிறரின் பாராட்டுக்காகவும் புகழுக்காகவும் ,கவனத்தை ஈர்ப்பதற்காகவும் எதையேனும் செய்யாமல் குறைகளை மறைக்காது உள்ளது உள்ளபடி முடிந்தவரை மனசாட்சியோடு இருப்பதுவே.ஆபாசமாகவும் வக்கிரமாகவும் எழுதுவது மட்டுமே தன் சுயம் எனக் காட்டுவது அல்ல
அதிக பட்சமாய் அழகைக் குறை சொல்வது, உங்களுக்குப் பிடிக்காத பெண்ணுக்கு ஆதரவாய்ப் பேசுபவர்களை மாமா என்றழைப்பது,இன்னும் ஒரு படி மேலே அவர்களுக்குள் சம்திங் சம்திங் என கதை கட்டி விடுவது, இதைத் தவிர வேறு என்ன கிழிக்க முடியும்? இந்தப் பேச்சுக்கள் யாவும் விமர்சிக்கும் உங்கள் தரத்தையே (?!) காட்டுகிறதே அன்றி விமர்சிக்கப்படும் நபர்களைப் பற்றி அல்ல
இன்னும் சில பெண்ணீயவாதிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கென்று ஒரு ரெகுலேட்டர் இருக்கின்றது பிடித்தவர்கள்,சம்பந்தமே இல்லாதவர்கள் அல்லது தான் நேரடியாக பாதிக்கப்பட்டால் பெண்ணீயம் சூடு பறக்கும்.அதுவே பிடிக்காதவர்கள் அல்லது கிண்டல் செய்பவர்கள் தங்கள் நண்பர்களாக இருந்தால் ரெகுலேட்டர் வேறு திசையில் ட்யூன் ஆகிவிடும்.எதற்கும் டெல்லிப் பெண் உயர்ஜாதியா எனப் பார்த்துக் கொள்ளுங்கள் இல்லாவிடில் நீங்கள் எழுதியது எல்லாம் வீணாகிவிடும் .எல்லா உயர்(த்திக்கொண்ட)ஜாதிப் பெண்களும் பலம் வாய்ந்தவர்கள் இல்லை என்பது புரிந்துவிடவா போகின்றது?பிடிக்காத பெண் தவறாய்ப் பேசியதாகப்பட்டால் அவர் தவறை மட்டும் விமர்சிக்காமல் ஆபாசமாக தாக்கும் நண்பர்களைக் கண்டிப்பதில்லை இந்தப் பெண்ணீய வாதிகள்.கண்டித்திருந்தால் பல பிரச்சனைகளைத் தவிர்த்திருக்கலாம் .தொடர்ச்சியாக திரும்ப அதையே அவர்களும் செய்திருக்க மாட்டார்கள்
ஜாதி பற்றியும் சில வரிகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன் .இணையத்தில் மட்டும் தான் ஜாதி வெறி என்பது என்னமோ பிராமணர்களுக்கும் , தேவர்களுக்கும் மட்டுமே இருப்பது போலப் பேசுவது வியப்பாக இருக்கின்றது.சாதி இல்லை ரத்தத்தில் சாதி தெரியுமா என்பவர்கள் கூட சாதி புத்தி எனக் குற்றம் சாட்டத் தவறுவதில்லை.மதுரையில் மன்னர் "நாயக்கர்"கல்லூரி ,வெள்ளைச் சாமி "நாடார்"கல்லூரி ,சௌராஷ்டிரா " கல்லூரி என ஜாதிக்கொரு ,மதத்திற்கு ஒரு பள்ளி கல்லூரிகள் உள்ளன.திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் மண்டபம் உண்டு பறவைக்கு திருமணம் கூட ஒரு சமூகத்தின் திருமண மண்டபம்தான். வீடு வாடகைக்கு தேடித் பாருங்கள் தேவர்(பிரச்சனை செய்யக் கூடுமாம்),முஸ்லிம் ,கிருத்துவர் (வீடு சுத்தமா வச்சுக்க மாட்டாங்களாம்) என்றால் தர மாட்டாங்க
சாதிவெறி எதிர்ப்பை ஆதிக்க சாதியினரிடம் இருந்து ஆரம்பிச்சது எல்லாம் சரிதான் ஆனால் ரொம்ப வருசமா ஆரம்பிச்ச இடத்திலேயே நிற்கின்றீர்கள் சுற்றிப் பார்த்தால் ஏகப்பட்ட ராமதாசுகளும் காடுவெட்டி குருவும் ஒவ்வொரு சமூகத்திலும் உண்டெனப் புலப்படும்.
வக்கிரம் பிடித்த மனதுகளை நான் பூணூல் வைத்துப் பிரிப்பதில்லை . களைச் செடிகள் அனைத்து தரப்பிலும் உண்டு .ஒரே ஜாதில பெண்ணெடுத்துக் கொடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கும் அதே போல செய்பவர்களும் அல்லது தலித் அல்லாத சமமான ஜாதி என்றால் காதல் திருமணம் ஓகே எனச் சொல்பவர்களும் இங்கே எதற்காக ஒரு போலி முகமூடியில் திரிகிறார்கள் எனத் தெரியவில்லை.(கவுண்டமணி டயலாக் தான் நினைவுக்கு வருகிறது அரசியல்வாதியும் சினிமாக்காரனும் தான் பண்றாங்கன்னா நாம வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் ..:) )
போலி ஆன்மீக வாதிகள் போல போலி நாத்திகர்களும் உண்டு.பெரியார் என்றாலே கடவுள் மறுப்பு மட்டும் தானா?அவரின் சுரீர் ரக பெண்ணுரிமைக் கருத்துகளை எல்லாம் படித்தவர்களே இல்லையா?ஒரு பக்கம் பெரியாரிசம் , இன்னொரு பக்கம் பிடிக்காத பெண்ணைப் பற்றித் தரக்குறைவாக பேசுதல் இது என்ன வகை மனநிலை?
எத்தனை ஸ்க்ரீன் ஷாட் வேண்டும் உங்களுக்கு ?நீங்கள் இங்கே மதிக்கின்ற சிலரது உண்மை முகங்கள் மிகக் கோரமானவை.
ஆனால் பொதுவாக சில பெண்கள் தங்களை வைத்துப் பிரச்சனைகள் வீட்டிற்குள் நுழைக்க விரும்புவது இல்லை . செருப்பைக் கழட்டி விட்டு வீட்டுள் நுழைவது போலத்தான் அத்தனையையும் உதிர்த்துவிட்டு நுழைவது. குடும்பத்தின் மீது உள்ள பிரியமே பலவீனம் பல பெண்களுக்கு. எங்கே அசிங்கமோ,வீட்டில் வருந்துவார்களோ என்று பொது வெளியில் நடப்பவற்றை சகிக்கவே வேண்டி இருக்கின்றது. பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்ள முயல்பவர்களை ஜென்மங்களை பெருந்தன்மையாக ஒருக்காலும் மன்னிக்கவும் முடியாது அதற்காக அவர்கள் படு கேவலமான நிலை அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவும் முடியாது.வெறுப்பதற்குக் கூட இடமின்றி மனதில் இருந்து முழுவதுமாய் அகற்றி விட்டு அவர்களால் துளியும் பாதிக்கப்படவில்லை எனஉணர்த்தி அவர்களின் முன்பு நலமாய் இருப்பதும் புழுவைப் போல அவர்களை அலட்சியம் செய்வதுமே நாம் கொடுக்கும் பெரிய தண்டனை.மீதி இறைவன் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவது
மெய் &மெய் நிகர் உலகங்களில் பெண்களைத் தொந்தரவு செய்பவர்களுக்கு கீழ்க்கண்டவை சமர்ப்பணம்
"அரட்டைப் பெண் கொடுத்த அரசியல் கமெண்ட் :
வெறி நாய்க்கு பயந்து ஒதுங்குவது அந்த வெறி நாய்க்குப் பெருமை இல்லீங்க "வெறி நாய் கடிச்சிடும்னு
"சாக்கடைகள் என்று அறிந்த பின் கல்லெறியாமல் ஒதுங்கிச் செல்வதே புத்திசாலித்தனம் "
பெண் கொடுமைக்கு எதிரான சட்டங்கள் எல்லாம் தவறாகவே பயன்படுத்தப்படுகின்றன என கூவுவோருக்கு இங்கே குழந்தை என்ற ஒரே காரணத்திற்காகவோ அல்லது குடும்பச் சூழல் காரணமாகவோ வேறுவழியின்றி சகித்துக் கொள்பவர்களே அதிகம். 75% பேர் இன்னும் வெளியேவரல.என் பக்கத்து வீட்டில் நடு ராத்திரியில் ஓலம் கதவை உடைத்துவிட்டுப் பார்த்தால் நிறைமாத கர்ப்பிணியை கையையும் காலையும் கட்டிவைத்து அடித்துக் கொண்டிருந்தான் குடிகாரக் கணவன். அந்தப் பெண் இன்றும் அந்த நபரோடுதான் வாழ்கின்றார். காவல் நிலையம் ,நீதி மன்றம் வாசப்படி மிதிப்பதையே கேவலம் என நினைக்கின்ற மக்கள் நிறைய அதற்கு கொடுமையைச் சகிக்கலாம் என்றே எண்ணுகின்றனர்
ஏன் என்னையே கேட்டால் பெண்ணுரிமை பேசி (எனக்காகவே என்றாலும்) போராடுவது முக்கியமா அல்லது குறைந்த பட்ச நிம்மதியாவது முக்கியமா என்றால் இரண்டாவது வாய்ப்பையே தேர்ந்தெடுப்பேன்.எத்தனை பேரிடம் மல்லுக் கட்ட முடியும்.ஒதுங்கிச் சென்றுவிடுவது உத்தமம் இல்லையா?
அடுத்தது உடை எவ்வளவுதான் கண்ணியமாக உடையணிந்து இருந்தாலும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து மறு நிறுத்தம் வருவதற்குள் பார்வையாலே புணர்ந்து விடும் வெறி கொண்டவர்கள் உண்டு.ஆபாசமாக எதையேனும் பேசி (காறி உமிழ்ந்தால் கூட அமிர்தம்தான்)அதை நாம் கவனித்திருந்தாலே போதும் ஏதோ பெரும் பேறு அடைந்த நிலையில் வக்கிரமான சிரிப்பு வரும் . அதனால் இதுபோன்ற பாலியல் வக்கிரங்களுக்கு உடை மட்டுமே காரணம் என்பதை நிச்சயம் ஏற்க முடியாது.பால்மணம் மாறாத பூப்பெய்தாத குழந்தைகளை வன்புணர்ந்த மிருகங்களை எல்லாம் நம் சமூகத்தில் கேள்விப் படாமலா இருக்கின்றோம்? ஆனால் அதற்காக நான் எப்படி வேண்டுமானாலும் உடையணிவேன் நீ பார்க்காமல் போ என்ற பேச்சிலும் உடன்பாடில்லை.கண்ணியமாக உடையணிவதே பாதுகாப்பற்ற தேசத்தில் உணர்வுகளைத் தூண்டும் வகையில் கண்களை உறுத்தும் வகையில் உடையணிவது எவ்விதத்தில் பாதுகாப்பாக இருக்கும்?இதிலே சம உரிமை கோருவது நமக்கே பிசகாக விடியும்
தாறுமாறான உடைகளைப் பார்த்தால் ஆண் தடுமாறுவது அவன் இயல்பு.அப்படி இல்லாவிட்டால் அவன் ஆணுமில்லை (இதை நான் சொல்லல ஒரு தேர்ந்த மன நல மருத்துவர் குறிப்பிட்டது) அதை மீறி உறுதியாய் இருப்பது அவனது மேன்மை அதுவே ஆண்மை
நடு நிசி கீச்சு எனப் புரியாமல் அர்த்தம் கேட்ட பொழுது மிகச் சாதாரணமாகச் சொல்லி நழுவிய நண்பனிடம் இருந்தது ஆண்மை
தோழியுடன் சாதரணமாய்ப் பேசியதை இரட்டை அர்த்தமாக்கிவிட்ட நண்பர்களுக்காக சட்டென்று மன்னிப்பு கேட்ட நண்பனிடம் இருந்தது ஆண்மை
தந்தை இறந்துவிட்டார் இனி இந்த வீட்டில் பைசா தேறாது வேறு பெண் பார் என உறவினர்கள் வற்புறுத்தியும் எதையும் எதிர்பாராமல் திருமணமும் குழந்தை இல்லை எனக் காரணம் காட்டி மறுமணமும் செய்யாத என் தந்தையிடம் பார்த்திருக்கிறேன் ஆண்மையை
குடித்திருக்கிறேன் இத்தோடு உன்னோடு பேசுவது சரியாய் இராது என்று விலகிச் சென்ற நண்பனிடம் உள்ளது
பிடிக்கவில்லை என ஒதுங்கிய பெண்ணை வலிய சென்று வம்பிழுத்து ஒதுங்கியது சரிதான் என உறுதிப்படுத்தும் வகையில் வெறித்தனம் காட்டாமல் இப்படி ஒரு மனிதனை தவறாய்ப் புரிந்துகொண்டோமோ என அவளை உணரவைப்பதில் இருக்கின்றது ஆண்மை
வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் மட்டம் செய்யாமல் தளர்ந்த நேரங்களில் தாங்கிப் பிடிப்பது ஆண்மை
பெண்ணின் வயிற்றில் பிறந்து பெண்ணோடு வளர்ந்தவன் பெண்ணின் வலிகளை புரிந்து வைத்திருப்பது
பொன்னிற்காக தன்னை விலைபேசாமல் பெண்ணிற்காக மட்டுமே மணம் முடிப்பவனிடம்
ரசனைகள் சம்பந்தப் பட்ட பெண்ணை எவ்விதமாகவும் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது
அசட்டுத் துணிச்சலோ வெற்று ஜம்பமோ அன்றி தேவையான இடத்தில் வெளிப்படும் தைரியத்தில்
உடல்ரீதியாகவும் ஒரு குழந்தைக்கு அப்பன் எனப் பெயர் பெறுவதிலும் மட்டுமே அல்ல குழந்தையாய் அரவணைத்துச் செல்வதில் இருக்கின்றது
ஒரு பெண்ணை முழு நிர்வாணமாக பார்க்க நேர்ந்தாலும் வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ளாமல் உறுதியோடு நிற்பவன் வீரன் எனப் படித்திருக்கின்றேன்
விருப்பமில்லாத சரிக்கு சமமான உடல் வலிமை அற்ற பெண்ணை வன்புணர்வதில் அல்ல விரும்பிய மனைவியே ஆனாலும் அல்லது விலைமகளே ஆனாலும் பிடிக்கவில்லை என்றால் விலகி நிற்பதுதான் ஆண்மை
"மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம் மானம் காக்கும் மாந்தர் யார்க்கும் மாலை வாங்கி போடுவோம் "
" பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடல் சொன்ன சித்தர்களும் ஈன்ற தாயும் பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே "
இதைச் சொன்னவரும் ஆண்தான் இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறதா?அல்லது இவரிடமும் எப்படி அம்மாவை இழுக்கப் போச்சு அல்லது உன் வீட்டுப் பெண்ணை போல் பாவி என்பதற்கு என் மனைவி போல நினைக்கலாமா என கேள்வி கேட்பது அழகா?
இயல்பான போராட்ட குணம் தைரியம் மட்டும் இல்லாவிட்டால் மெய் உலகத்தில் மட்டுமல்ல மெய் நிகர் உலகத்திலும் கூட நடமாட முடியாது
பொதுவா பிரச்சனைகளை வெளியே சொல்லும் பொழுதெல்லாம் இது விளம்பரம் பப்ளிசிட்டி என திசை திருப்பிவிடும் நபர்களுக்கு இதனால் என் பெர்சனல் வாழ்க்கைக்கு ஒரு துளி கூட உபயோகமில்லை.இணையத்திற்கு வர வீட்டில் அனுமதிப்பதும் எந்த பிரச்னையும் இல்லை என வீட்டில் உத்தரவாதம் கொடுத்ததால்தான்.வேண்டாம் என முடிவாகச் சொல்லிவிட்டால் இதுவும் தற்காலிகமே
டெல்லி பெண்ணுக்காக உங்கள் கொந்தளிப்பு உண்மையாகவே இருக்கட்டும் நலம் இது ஒரு ஆரம்பமே ஆனால் உங்கள் வசதிக்கு ஊடகம் பொருட்படுத்தாத மற்ற நிகழ்வுகளைப் பற்றியும் இதே போல அக்கறையாக விவாதியுங்கள்.ஆடை விலகவும் பதறும் பெண்களை விட அந்நேரம் வெறிக்காத தன்மையை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுங்கள்.சுய ஒழுக்கம் என்பதை உங்களில் இருந்தே ஆரம்பியுங்கள்.உங்களுக்கு ரோஷம் வர ஒவ்வொருமுறையும் ஏதேனும் ஓர் உயிர் பலி ஆக வேண்டியிருக்கின்றது என உணருங்கள்.ஒரு சிலரிடம் பட்ட சூட்டினால் மற்ற ஆண்களிடம் எச்சரிக்கையாகவும் நம்பிக்கையற்றும் பழக வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு பெண்கள் இருப்பது நிச்சயம் தவறு செய்யாத/செய்ய விரும்பாத நல்ல ஆண்களுக்கும் அவமானமே
உங்கள் வீட்டு வாசலை நீங்கள் சுத்தப்படுத்தினால் உலகமே சுத்தமாகிவிடும் என்ற பழமொழி நிஜமாகட்டும்.
பெண்களுக்கு சில வார்த்தைகள் : முடிந்தவரை எச்சரிக்கையுடன் பழகுங்கள் சில இணைய நட்புகள் காலைச் சுற்றிய பாம்பைப் போல..எப்பொழுது கடிக்கும் என்பது தெரியாது..குறைந்த பட்சம் பாம்பு என்பதை அறிந்தேனும் வைத்திருந்து அளவோடு இருங்கள்..அனுபவமும் கவனிப்பும் காரணமாக இவர்கள் இப்படித்தான் என்ற புரிதல் வந்த பின் அளவோடும் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியுடன் பேசுவதால் இப்பொழுது நிம்மதியாக இருக்கிறேன்
19 comments:
இணையத்தின் உண்மைக்கான குரல் நீங்கள்! பென்மைக்கான குரல் நீங்கள்!மிகவும் துணிச்சலாக, ஆணித்தரமாக, தெளிவாக உங்கள் கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள். இன்றும் பெண்களைப் போகப் பொருளாகவும் துச்சமாகவும் பார்க்கும் சமுதாயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அடிப்பட்டவர்களுக்கு மட்டுமே அடியின் வலி தெரியும். empathy என்ற குணம் உடையவர்களுக்கும் அதனை உணரும் சக்தி உண்டு. மற்றவர்களுக்கு (இதில் பெண்களும் சேர்த்தி) எள்ளி நகையாட மட்டுமே தெரியும். தவறைத் தட்டிக் கேட்டு எதிர்த்து நிற்கும் தைரியம் பல உடல் வலிமை மிகுந்த ஆண்களுக்குக் கூட இல்லாத இந்த சமுதாயத்தில் புடைவை முள்ளின் மீது விழுந்தாலும் முள் புடவையின் மேல் பட்டாலும் கிழிவது என்னமோ புடைவை தானே என்று சொல்லும் இந்த சமுதாயத்தில் நீங்கள் தைரியமாக இணையத்தில் எளிதாகப் பெண்களை ஏளனப் படுத்தும் ஆண்களின் சுய ரூபத்தைக் கிழித்துக் காட்டியிருப்பது பெரிய செயல். உங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அறச் சீற்றம் என்ற சொல்வதே இப்பொழுது பலரும் வேறு விதமாகப் பயன்படுத்திக் கேலிக்குரிய பதமாகிவிட்டது. ஆனால் உங்களின் அறச் சீற்றம் நியாயமானது என்பதைப் பதிவு செய்கிறேன். இன்றைய இணையச் சமுதாயம் கவனித்து உங்களுக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளது.
amas32
Sappa mudiyala
நல்லாத்தானே போயிட்டிருந்துது..
மிக்க நன்றி அம்மா :))) பதில் எல்லாம் சொல்ல வேண்டாம் .புரிஞ்சுகிட்டு வழி விட்டா போதும் பெண்களுக்கு அவங்களை அவங்க பார்த்துக் கொள்வார்கள்.இந்த பதிவு போய்ச் சேருமிடம் சேர்ந்துவிட்டது எனக்கு அது போதும் :)))))
அன்புள்ள அனானி உங்களுக்கு முடியாது என்பதுதான் தெரிந்த விசயமாச்சே :)
மாங்கு இப்பவும் நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு :) போன வாரம் ஆள் ஆளுக்கு பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக பொங்கினப்போ எழுதிய பதிவு இது முழுமையாக்கி வெளியிட இவ்வளவு நாள் ஆகிடுச்சு :)
Strong Post!
Appreciate your writing!
@TupTamil
miga nalla pathivu. Niyaayankal maddumae pathivu seiyappaddirukirathu.
இணைய தளத்தைப் பற்றி பல விஷயங்களையும் உங்கள் பதிவு மூலம் அறிந்து கொள்ள முயலுகிறேன். நன்றி.
பல நாட்கள் அடக்கி வைத்திருந்த கோபங்களை கொட்டிருப்பது போல் இருக்கிறது.. ஆனால் சில இடங்களில்
அளவுக்கு மீறி பாய்ந்திருந்தது போல் இருக்கிறது... நீங்கள் பொதுப்படையாக எல்லோரையும் சொல்லியிருப்பது, இணையத்தை ஆண்கள் பொண்ணுகளை வம்பு இழுப்பதற்கு மட்டுமே
பயன்படுத்துகிறார்கள் என்ற மாயையே உருவாக்குகிறது.. நீங்கள் பொதுவாக பேசியதற்கு பதிலாக அவர்கள் பெயரையே சொல்லிருக்கலாம்.
நீங்கள் நிறைய எழுதிருக்கிறீர்கள் ஆனால் அதில் நடந்த நிகழ்வுகளை சொல்லிருப்பது குறைவானக இடத்திலேயே..
நான் வெறும் பார்வையாளனாக மற்றுமே இன்று வரை இருந்து உள்ளேன்.. நீங்கள் கூறியதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.. ஆனால் எழுதியதில் இருக்கும் காரம் கொஞ்சம் ஓவரா தெரியுது
நண்பா பொதுப்படையாக குற்றம் சாட்டுவதில் எனக்கு உடன்பாடே கிடையாது.ட்விட்டர் ஒரு flash back ல தமிழ் டிவிட்டர்கள் எத்தகு திறன் வாய்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிட்டே உள்ளேன் நான் இங்கே குறிப்பிட்ட வக்கிரச் செடிகளை மட்டுமே.மேலும் எந்த பொண்ணை என்ன என்ன தொந்தரவு கொடுத்தார்கள் யார் கொடுத்தார்கள் என்னை என்னவெல்லாம் பேசினார்கள் என்பது எல்லாமே தெரியும் அதையெல்லாம் சொன்னால் ஒரு பதிவு பத்தாது என்பதை பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்.மற்ற பதிவுகளில் எல்லாம் லிங்க் உண்டு இந்த பதிவுக்கு மட்டும் எந்த ஆதாரமும் நான் கொடுக்கவில்லை காரணம் இரண்டு ஒருவரிடம் பட்ட அசிங்கத்தை ஊர் முழுக்க ஒட்ட உடன்பாடில்லை .இன்னொன்று என் நோக்கம் அவர்களை சைபர் க்ரைமிடம் மாட்டி விடுவது அல்ல.ஒருவன் செய்த தப்பிற்கு குடும்பமே வருந்தும் நிலையை உருவாக்க நான் தயாராக இல்லை அது பெரிய குற்ற உணர்ச்சி ஆகிவிடும் எனக்கு.இது காரம் என்கிறீகள் உண்மையில் இங்கே பட்டதற்கு இது வெகு வெகு கம்மி .முடிந்தவரை வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்தே பயன்படுத்தி இருக்கின்றேன்.கண்டிப்பாக போய் சேர வேண்டியவர்களை இந்தப் பதிவு சேர்ந்துவிட்டது :) 66 A என்ற பயம் நிச்சயம் என் போன்ற பெண்களுக்கு பாதுகாப்புத் தான் :)
பொதுவாய் நினைத்துவிட கூடாது என்பதற்காக தான் இறுதியில் நல்ல ஆண்களும் அவமானமாய் உணரும்படி செய்யாதீர்கள் எனக் குட்டு வைத்தது
எப்படியோ.. இந்த அவமனகளை உணர்ந்தவர் நீங்களே.. உங்களால் மட்டும்தான் உங்கள் வலிகளை
கூறமுடியும்.. அந்த வகையில் இந்த காரம் சரியாக இருக்கலாம்..
எனக்கு பதில் அளித்தமைக்கு நன்றி...
நான் ட்வீட்டர்க்கு புதுசு...இதுல இப்படி எல்லாம் பிரச்சனை இருக்கா? ...உங்கள் பதிவை படித்தப்பின்னாவது சம்பத்தபட்டவர்களும்..இனி இதுபோல எண்ணம் கொண்டவர்களும் மனம் மாறனும்..மாறிடுவார்கள். சிற்ந்த பதிவு...வாழ்த்துக்கள்
Liked yuour post a lot. welldone
உங்களுடைய கோபம் நியாயமானதுதான். இதற்கு பதில் சொல்லக்கூட எனக்கு தகுதியில்லை என்று நினைக்கிறேன். உணர்த்தியமைக்கு நன்றி.
மிக தெளிவான அனுபவப்பூர்வமான பதிவு ...
அதாவது நம்மூர்ல ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. ஆம்பளப் பசங்கள அது பாட்டுக்க விட்டுருவாங்க. அவனா வளந்துக்குவான்னு. ஒரு விதத்துல நல்லது மாதிரி தெரிஞ்சாலும் அது நல்லதில்ல. பையனோ பொண்ணோ.. வீட்டுப் பெரியவங்க அணைச்சு வளக்கனும். இன்னைக்கு ரொம்பக் கொஞ்ச பேர்தான் அம்மா கிட்டயோ கூடப் பொறந்த சகோதரிகள் கிட்டயோ அரைமணி நேரம் எதுவுமே இல்லாம பேச முடியுது. மத்தவங்களுக்கெல்லாம் பெரிய இடைவெளி. இந்த இடைவெளி குறையக் குறையத்தான் பல ஆண்களின் பார்வையிலும் நடவடிக்கையிலும் மாற்றம் வரும்.
பதிவில் பிரச்னைகளின் தன்மையும்,வலியும் புரிகிறது.தங்கள் எழுத்தின் ஆளுமைக்கு பாராட்டுகள்!.நிற்க. ஆனால் இது பெண்களுக்கான பிரச்னை என்று மட்டும் பார்க்க மறுக்கிறேன். மேலும் இது நீண்ட தர்க்கத்திற்கும், ஆய்வுக்கும் அவசியப்படுகிற பிரச்னை.
Post a Comment